• Feb 20 2025

மிஷ்கினின் எக்ஸ்ட்ரீம் லெவல் இதுதான்..! மேடையில் உணர்ச்சி வசப்பட்ட சமுத்திரகனி

Aathira / 2 weeks ago

Advertisement

Listen News!

சமுத்திரகனி நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தான் திருமாணிக்கம். இந்த படம் நேர்மையாக இருக்கும் ஒரு மனிதர் அவருக்கு ஏற்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் நேர்மை தவறாமல் நடக்கின்றாரா? இல்லை பணத்தை கண்டவுடன் மாறிவிடுகின்றாரா? என்ற கதை களத்தில் உருவானது. இதில் பாரதிராஜா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.. இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற திரு மாணிக்கம் படத்தின் நன்றி தெரிவிக்கும் விழாவில் சமுத்திரக்கனி மிஷ்கின் பற்றி பேசிய விடயங்கள் வைரலாகியுள்ளது.

செண்டிமெண்டாக பேசி வீட்டைவிட்டு கிளப்பிய ராதிகா.. இறுதியில் பாக்கியாவுக்கு சொன்ன வார்த்தை

அதாவது பாட்டில் ராதா திரைப்படத்தின் போது மது பழக்கம் குறித்தும் அதன் சாதக பாதகங்கள் குறித்தும் இன்ஸ்டாவில் பெண்கள் போடும் குத்தாட்டம் தொடர்பிலும் இளையராஜா பற்றியும் பல கருத்துக்களையும் தெரிவித்திருந்தார். இதற்கு பலரும் தமது கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள்.


இவ்வாறான நிலையிலே சமுத்திரகனியிடம் மிஷ்கின் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சமுத்திரக்கனி மிஸ்கின் பேசியதில் எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பதில் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.


மேலும் அவர் கூறுகையில், மிஷ்கின் அவ்வாறு பேசியதற்குத் தானே மன்னிப்பு கேட்டுவிட்டார். அதற்கான காரணத்தையும் அவர் சொல்லிவிட்டார். என்னை பார்த்தால் கூட அவர் கெட்ட வார்த்தை சொல்லி முதுகில் அடித்து பேசுவார். அது அவருடைய எக்ஸ்ட்ரீம். இதனை நான் அன்பின் உச்சக்கட்டமாக  தான்  பார்க்கின்றேன். இதனை நான் தவறாக பார்க்கவில்லை.

மிஷ்கின் பேசியதில் எந்த தவறும் இல்லை. அவரைப் பற்றி புரிந்தவர்களுக்கு தெரியும் அவர் யார் என்று. புரியாதவர்களுக்கு தான் அந்த மன்னிப்பு. அவருக்காக நானும் கூட மன்னிப்பு கேட்டுக் கொள்கின்றேன் என சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement