• Nov 23 2025

PR கேம் பற்றிய ரகசியங்களை அம்பலப்படுத்திய அரோரா.. நள்ளிரவில் வியானா கொடுத்த பதில்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 9 ஆரம்பிக்கப்பட்டு ஒரு வாரத்தை கடந்துள்ளது. இதில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். எனவே இம்முறை வைல்ட் கார்ட் என்ட்ரிக்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பில் பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டாலும், இந்த ஷோ டிஆர்பி ரேடிங்கில் முன்னிலை வகிக்கும். இதில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களும் பிரபலம் ஆனவர்களாகவே காணப்படுகின்றனர்.

கடந்த சில சீசன்களில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் தாங்கள் வெற்றி பெறவேண்டும் என்று பிஆர் வைத்ததாக கூறப்பட்டது. கடந்த சீசனிலும் இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.


இந்த நிலையில், பிக் பாஸ் சீசன் 9ல் கலந்து கொண்ட அரோரா, வியானா ஆகிய இருவரும் பிஆர் பற்றி பேசியவை தற்போது வைரலாகி உள்ளன. 

அதாவது, கடந்த சீசன்ல விளையாடினவங்க பெரும்பாலும் பிஆர் வைச்சு இருந்தாங்க.. அது முழுக்க பிஆர் கேம் தான் என்று சொல்லி இருந்தார்.

இதை கேட்ட வியானா, ஆமா.. போன சீசன்ல என் நண்பர் ஒருத்தரும் கலந்து கொண்டு இருந்தார். அவர் என்னையும் பிஆர் வைக்குமாறு சொன்னார். ஆனால் ஒரு நாளைக்கு 15000 ம் பணத்துல இருந்து 20 ஆயிரம் பணத்துக்கு எங்க போறது என பேசியுள்ளார்.


Advertisement

Advertisement