• Jan 18 2025

அசீமுக்கு டைட்டில்... பிரதீப்புக்கு ரெட் கார்டா... ஆண்டவரின் முடிவால் கொந்தளித்த ரசிகர்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

இந்த வார இறுதி எபிசோட்டில் மாயா, பூர்ணிமா,விஷ்ணு,மணி,ரவீனா உட்பட போட்டியாளர்கள் பிரதீப்கு எதிராக போர் கொடி தூக்கினர்.தகாத வார்த்தை பேசுகிறார் ,எல்லை மீறுகிறார், இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார், இவரால் இரவில் தூங்க பயமாக உள்ளது என அடுக்கடுக்காக புகார்களை தெரிவிக்க பிரதீப்பின் முகமே தொங்கி போனது.


இன்னும் ஒரு படி மேலே போய் தனது அரைநான் கயிறை பிரதீப் கிண்டல் அடிக்கிறார் என ரவீனா கூற அடுத்ததாக மணி பாத்ரூம் கதவை திறந்து வைத்துக்கொண்டு சிறுநீர் கழிக்கிறார் என மணி கூற பிரதீப் மீதான கிரைம் ரேட் ஏறிக்கொண்டே சென்றது.மணி கூறியதற்கு திமிர் தனமாக வேண்டும் என்றுதான் செய்தேன் என பிரதீப் சொல்ல அதுவரை பொறுமையாக இருந்த கமல் பிரதீப் வாயை ஆப் செய்து அடுத்த செப்டருக்கு நகர்ந்தார். 


பெண்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ரெட் கார்ட்  கொடுத்து வெளியேற்றினார். இந்நிலையில் அந்த முடிவுக்கு ஆதரவளித்து சிலர் எதிர்த்து சிலர் என சோசியல் மீடியாவில் பெரும் விவாதமே நடந்து வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண் போட்டியாளர்களுக்கு அச்சுறுத்தல் என ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட முதல் போட்டியாளர் பிரதீப் தான்.


பிரதீப்பை விட அதிக வசை சொல் பேசி பெண்களை அவமதித்து வந்த அசிமிற்கு கடந்த சீசனில் டைட்டில் வின்னர் கொடுத்து அலங்கரித்த பிக் பாஸ் தற்போது பிரதீப்பை ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிய வாதமும் சரியல்ல என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. 


ஆனால் பிரதீப் ரெட் கார்ட் எலிமினேஷின் போது கமல் பேசியதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். கண்டெண்டுக்காக போட்டியில் தரக்குறைவாக நடப்பதை உத்தியாக வைத்து இனிமே யாரும் விளையாடவே கூடாது என அழுத்தமாக கூறியிருந்தார். ஆகவே பிரதீப் வெளியேற மொத்த காரணமும் கமல் பேசியதில் இருந்தே புரிகிறது.


சீசன் தொடங்கியதில் இருந்தே திட்டமிட்டு விளையாடி வந்தார் பிரதீப். போட்டியாளர்களிடம் எவ்வாறு பேசுவது என திட்டமிடாமல் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசியதோடு, பெல் டாஸ்க்கில் கூல் சுரேஷோடு முற்றிய வாதத்தால் எல்லை மீறி பேசிய பிரதீப் கூல் சுரேஷ் தாய் பற்றி ஆபாசமாக பேசியதும் பிரதிபிற்கு கரும்புள்ளியாக மாறியது. பெண் போட்டியாளர்கள் அதிக புகார் முன்வைத்தமையாலே இந்த சீசனில் பிரதீப் வெளியேற்றப்பட்டுள்ளார். 

Advertisement

Advertisement