• Nov 07 2025

சேலையில் ஹாட்டாக போஸ் கொடுத்த கீர்த்தி ஷெட்டி... லீக்கான போட்டோஷால் ஷாக்கில் ரசிகர்கள்

subiththira / 13 hours ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவின் திறமையான இளம் நடிகைகளில் ஒருவராக தற்போது ரசிகர்களின் இதயத்தில் ஆட்சி செய்து வருகிறார் கீர்த்தி ஷெட்டி (Krithi Shetty).


தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிரபலமான இவர், தனது அழகான முகபாவனைகள், இயல்பான நடிப்பு, மற்றும் ஸ்டைலிஷான பேஷன் சென்ஸ் ஆகியவற்றால் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

கீர்த்தி ஷெட்டி, 2021ஆம் ஆண்டு வெளிவந்த ‘உப்பேனா’ (Uppena) திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியால், கீர்த்தி திடீரென ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

அதனைத் தொடர்ந்து அவர் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இவர் சில முக்கிய தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.


திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், கீர்த்தி சமூக வலைத்தளங்களில் மிகுந்த செயல்பாட்டுடன் இருந்து, அடிக்கடி தனது புதிய புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார். சமீபத்தில் கீர்த்தி ஷெட்டி தனது Instagram பக்கத்தில் வெளியிட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் பெரும் கவனத்தை பெற்றுள்ளன.

அந்த புகைப்படங்களில் அவர் சேலையில் மாடர்ன் மற்றும் கவர்ச்சியான போஸ்களில் ரசிகர்களை மெய் மறக்க வைத்திருக்கின்றார். இந்த போட்டோஸ் தற்பொழுது வைரலாகி வருகின்றது. 

Advertisement

Advertisement