தமிழ் சினிமாவிலும், தென்னிந்திய இசைத்துறையிலும் பல தசாப்தங்களாக தன் இனிமையான குரலால் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்திருப்பவர் பாடகர் மனோ. அவரின் குரல் இனிமை மற்றும் இசை உணர்வு என அனைத்தும் அவரை ரசிகர்களுக்கு மிக நெருக்கமானவராக வைத்திருக்கின்றன.

சமீபத்தில் நிகழ்ந்த தொலைக்காட்சி பேட்டியில் பாடகர் மனோவிடம் பயில்வான் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அந்த கேள்வியும், அதற்கு மனோ கொடுத்த பதிலும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
பேட்டியின் போது பயில்வான், " பாடகர் மனோவைப் பார்த்து நீங்க இந்துவா மாறிட்டீங்களா.? சமீபத்தில கோவிலுக்குப் போய் அங்கப்பிரதேசம் பண்ணி இருக்கீங்க..." எனக் கேட்டிருந்தார்.

இந்த கேள்வி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்திய நிலையில், மனோ இதற்கு சிறப்பாக பதிலளித்திருந்தார்.
அதாவது, "பாடகருக்கு எல்லா மதமும் சொந்தம்... நான் இந்து... நான் முஸ்லீம்.. நான் கிறிஸ்தவன்.. என்று இல்ல. நான் எல்லா இடத்துக்கும் போவேன். என் பாட்டை எல்லாரும் தானே கேக்கிறாங்க... எல்லா மதமும் சம்மதம். அதுக்கு மேல நான் மனிதன்.." என்று மனோ பதிலளித்திருந்தார். இந்தக் கருத்துகள் தற்பொழுது வைரலாகி வருகின்றது.
Listen News!