சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட், வித்யா முருகனிடம் போனை வாங்கி எடுக்கின்றார். அதன் பின்பு மீனாவுக்கு போன் பண்ணி நடந்த விஷயங்களை சொல்ல, அப்படி என்றால் அவர் நல்லவராக தான் இருப்பார்.. நீங்க நாளைக்கு அவரிடம் போனை கொடுத்துவிட்டு பேச ஆரம்பிங்க என்று ஐடியா கொடுக்கின்றார்.
அந்த நேரத்தில் ரோகிணியின் அம்மா வித்யா வீட்டிற்கு வருகின்றார். அதன் பின்பு ரோகினி வந்து நகைகளை கொண்டு வந்தியா? என நகைகளை வாங்கிக் கொண்டு அடகு வைக்கச் செல்கின்றார்.
இன்னொரு பக்கம் மனோஜ் ஷோரூமின் டெக்ஸ் கட்டாததால் அங்கு வந்தவர்கள் மனோஜை சரமாரியாக திட்டுகிறார்கள். ஆனாலும் அந்த நேரத்தில் ரோகினி சரியாக காசு கட்டி விட்டதாக சொல்ல அவர்கள் இனிமேல் டெக்ஸை சரியாக கட்டுங்கள் இல்லை என்றால் சீல் வைத்து விடுவோம் என என எச்சரித்து செல்லுகிறார்கள்.
அதன் பின்பு தன் மானத்தை காப்பாற்றியதற்காக ரோகினிக்கு நன்றி சொல்லுகின்றார். மேலும் காசு எப்படி புரட்டினா என கேட்க, ரோகினி கடன் வாங்கியதாக சொல்கின்றார்.
இடைத்தொடர்ந்து முத்து மீனாவிடம் கிரிஷை பார்த்த விஷயத்தை சொல்லுகின்றார். இதனால் மீனா ஒரு நாள் கிரிசை பார்த்து வருவோம் என்று சொல்ல, இதனை ரோகிணி தனது ரூமில் இருந்து கேட்டுக் கொண்டுள்ளார். அதன் பின்பு முத்து டிரைவிங் ஸ்கூல் ஆரம்பிப்பதற்காக அடுத்த நாள் வாசலில் பூஜை உடன் தொடங்குகின்றார்.
அதற்கு அண்ணாமலையின் பெயரை வைத்து சந்தோஷப்படுகிறார். இதன் போது அண்ணாமலை விஜயாவிடம் நம்ம பையன் முன்னுக்கு வாறன். நீ தான் ஆரத்தி எடுத்து ஆசீர்வாதம் பண்ணனும் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் விஜயாவும் பண்ணுகின்றார்.
அதன் பின்பு முத்துவின் டிரைவிங் ஸ்கூலில் மீனா முதலாவது ஸ்டுடண்டாக சேருகின்றார். அதற்கு பீஸ் கட்டனுமே என்று சொல்ல உடனே தனது செக் புக்கில் இருந்து ஒரு செக்கை கிழித்து அண்ணாமலை இடம் கொடுத்து முத்துவிடம் கொடுக்கச் சொல்கிறார்.
இறுதியாக ஸ்ருதியிடம் கார் ஓட்ட பழகவில்லையா என கேட்க, அவர் தனக்கு இன்ட்ரஸ்ட் இல்லை என்று சொல்லுகின்றார். அதற்கு ரோகினி பிறகு கார் ஓட்ட என்ன பண்ணுவீங்க என்று கேட்க, ரவி ஒட்டுவான் இல்லை டிரைவர் வைப்போம் என்று சொல்ல, உடனே விஜயா அதானே மீனா பழகுகிறாள் என்று அவரை அசிங்கப்படுத்துகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!