• Aug 25 2025

மீண்டும் திரையில் "தடையறத் தாக்க"....!ரசிகர்கள் மிகுந்த எதிர் பார்ப்பில்...!

Roshika / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் அருண் விஜய் இவர். பல திரைப்படங்களில் நடித்து  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இந்த நிலையில் இவர் நடித்த "தடையறத் தாக்க" திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன .


தற்போது பழைய திரைப்படங்களை மீண்டும் திரையில் வெளியாவது  ட்ரெண்டாகி வருகின்றது . மேலும் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தினை   மகிழ் திருமேனி  இயக்கியுள்ளார்.இப்படத்தில் அருண் விஜய், மம்தா மோகன்தாசு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும் இப்படத்திற்கு சீ. தமன் இசையமைத்துள்ளார் .


மேலும் இந்த படத்தற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.  "தடையறத் தாக்க" திரைப்படம் 2012 ஆம் ஆண்டு வெளியானதுடன். ரசிகர்கள் மத்தியிலும் வசூல் ரீதியிலும் சாதனைபடைத்து இருந்தது. இப்படம் அருண் விஜய் நடிப்பில் வெளிவந்த வெற்றி படங்களில் ஒன்றாக ரசிகர்கள் மத்தியில் கூறப்படுகின்றது .மேலும் இந்த படம் 4K தரத்திலும் புதிய டிஜிட்டல் பதிப்பாகவும் வரும் ஜூன் 27ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது இந்த திரைப்படத்தினை  ரீ-ரிலீஸ் மூலம் இப்படம் மீண்டும் ரசிகர்களை திரையரங்குகளில் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement