• Dec 29 2025

சிவகார்த்திகேயனை Miss பண்ணது கவலையா இருக்கு.. பிரபல இயக்குநர் ஓபன்டாக்.!

subiththira / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான படைப்புகளால் ரசிகர்களின் மனதில் அழியாத இடத்தைப் பிடித்தவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல். ‘காதல்’, ‘வழக்கு எண் 18/9’ போன்ற சமூக உணர்வுபூர்வமான கதைகளை உணர்ச்சி தூண்டும் வண்ணம் இயக்கி, திரையுலகில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கியவர்.


இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில், இயக்குநர் பாலாஜி சக்திவேல், நடிகர் சிவகார்த்திகேயன் பற்றி கூறிய கருத்துகள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.

இந்த பேட்டியில் பாலாஜி சக்திவேல், "நான் எப்பொழுதும் திறமையான நடிகர்களை பயன்படுத்த முயற்சி செய்து இருக்கிறேன். அதே நேரத்தில் சிலரை மிஸ் செய்து இருக்கிறேன். நான் சிவகார்த்திகேயனை 'வழக்கு எண் 18/9' படத்தில் நடிக்க வைக்கலாம் என நினைத்தேன். ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. சிவகார்த்திகேயனை மிஸ் செய்தது எனக்கு இன்றும் வருத்தமாக இருக்கிறது." என்று கூறியுள்ளார். 


இந்த கூற்று அவருடைய மனதளவிலான பாராட்டையும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்துகிறது. ஒரு படைப்பாளியாக அவர் விரும்பிய ஒரு நடிகரை, சரியான நேரத்தில் பயன்படுத்த முடியாதிருப்பது அவருக்கு எவ்வளவு வேதனையை அழித்திருக்கும் என்பதையே இது உணர்த்துகிறது.

Advertisement

Advertisement