பஞ்சாபி, ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் தமிழ் என பல மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகை பாயல் ராஜ்புட். கடந்த ஆண்டு ரக்ஷனா படத்தில் நடித்து தமிழ் சினிமாவிலும் தெலுங்கில் கிராதனா படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில் பாயல் ராஜ்புட் தனது சமூக ஊடக பக்கத்தில் ஒரு துயரமான செய்தியை பகிர்ந்துள்ளார். அவரது தந்தை தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கிம்ஸ் மருத்துவமனையில் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
மேலும் பாயல் தனது பதிவில் “நான் நம்புகிறேன், உங்கள் அனைவரின் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவால் என் தந்தை விரைவில் முழுமையாக குணமடைவார்” என்று கூறியுள்ளார்.பாயல் ராஜ்புட் மற்றும் அவரது குடும்பத்திற்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருவதுடன் தந்தையின் உடல்நலம் விரைவில் குணமடைய பிராத்திப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் இவர் தனது கையுடன் தந்தையின் கையை வைத்து எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினையும் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Listen News!