விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் கடந்த அக்டோபர் 5ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது ஐந்து நாட்களைக் கடந்துள்ளது. இதுவரையில் போட்டியாளர்களிடையே சண்டைகள், நகைச்சுவைகள், கோபங்கள் என பல உணர்வுகள் ஏற்பட்டு வருகின்றது.
இந்நிலையில் 5வது நாளுக்கான promo தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில் கனி மற்றும் பிரவீன் தெரிஞ்சே சிக்கனில் உப்பை கூடுதலாக சேர்த்துவிட்டு சாப்பாடு இல்லாதவங்களோட அருமை என்னவென்று அவங்களுக்கும் தெரியட்டும் என்று சொல்லுறார்கள்.
அதை சாப்பிட்டவங்க உப்பு ரொம்ப அதிகமா இருக்கு என்கிறார்கள். அதன் பின் ஆதிரையும் கனி கிட்ட நீங்க ஒரு விஷயத்தை செய்தால் முழுசா முடிக்கணும் என்கிறார். பின் பிரவீன் ஆதிரை கதைத்ததுக்கு இவங்களுக்கு யார் ரைட்ஸ் கொடுத்தாங்க பேசுறதுக்கு என்று கேட்கிறார்.
அதைக் கேட்ட ஆதிரை நீங்க சாப்பாட்டை வேஸ்ட் பண்ணா நான் கேட்கத் தான் செய்வேன் என்கிறார். இதுதான் தற்பொழுது வெளியான promo.
Listen News!