• Jan 19 2025

மணி சந்திரா பெயரில் உலாவரும் போலிக் கணக்குகள்! வெளியான ஷாக் நியூஸ்! ரசிகர்களே உஷார்....

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் முதலாவது ரன்னர் அப் ஆக வெற்றி பெற்றவர் தான் மணி சந்திரா. இவர் பிக் பாஸ் வருவதற்கு முன்பே பிரபலமாக காணப்பட்டார்.

தமிழ் சினிமாவில் நடன கலைஞராக பணியாற்றி வரும் மணி சந்திரா, விஜய் டிவியில் ஒளிபரப்பான  'ஜோடி நம்பர் 01' என்ற  ரியாலிட்டி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

வெளிநாட்டில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கு கொரியோகிராபி பண்ணி கொடுப்பதில் கை தேர்ந்தவராக காணப்பட்டார் மணி.


இந்த நிலையில், பிக் பாஸ் மணி சந்திராவுக்கு இன்ஸ்டாகிராமில் மட்டுமே கணக்கு உள்ளதாகவும், எக்ஸ் பக்கத்தில் அவருக்கு கணக்கு இல்லை எனவும் கூறப்பட்டுள்ளது.

அதாவது, பிக் பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்ததும் வெளியே வந்த மணி, தனது புகைப்படங்கள், வீடியோக்கள், ரசிகர்களை சந்தித்தது என அனைத்தையும் சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.

இவ்வாறான நிலையில், அவருடைய பெயரில் போலிக் கணக்கு ஒன்று எக்ஸ் பக்கத்தில் உள்ளதாகவும், அது அவருடையது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement