• Jan 19 2025

நடிகை ரட்சிதா வெளியிட்ட சூப்பர் அப்டேட்! அப்போ மார்ச் மாதம் கொண்டாட்டம் தானா? ரசிகர்கள் வாழ்த்து

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் மிகவும் பிரபலமானவர் தான் நடிகை ரட்சிதா. இவர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். எனினும் கருத்து வேறுபாடு காரணமாக தற்போது இருவரும் பிரிந்து காணப்படுகின்றனர். ஆனால் இன்னும் முறைப்படி விவாகரத்து ஆகவில்லை.

விஜய் டிவியில் இடம்பெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 6ல் ரட்சிதாவும் ஒரு  போட்டியாளராகச் சென்றார். எனினும், பிக்பாஸ் வீட்டிற்குள் இருந்த ரட்சிதா ஒரு முறை கூட தனது கணவர் தினேஷ் குறித்து நேரடியாகவோ மறைமுகமாகவோ எதையும் பேசவில்லை.

பிக் பாஸ் முடிந்து வெளியில் வந்த ரட்சிதா - தினேஷ் மீண்டும் இணைவார்கள் என ரசிகர்கள் எதிர் பார்த்த போதும் அதுவும் நடக்கவில்லை. 


இதை தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 7 இல் கலந்து கொண்ட தினேஷ் 3ர்ட் ரன்னராக வெற்றி பெற்றார். அவரும் வெளியில் வந்துள்ள நிலையில், ரட்சிதாவுடன் இணைந்ததாக தெரியவில்லை.

ஆனாலும், பிக் பாஸ் வீட்டுற்குள் இருக்கும் போது மனைவிக்காக ரொம்பவே பீல் பண்ணி பேசியிருந்தார். இறுதியில், அவருக்காக பாடலும் பாடி அசத்தி இருந்தார்.

இந்த நிலையில், தற்போது நடிகை ரட்சிதா நடித்த படத்தின் புதிய அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதை அவரே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

அதன்படி, "RANGANAYAKA"என்ற படம் எதிர்வரும் மார்ச் மாதம் 8ம் திகதி ரிலீஸ் ஆகுமென குறிப்பிட்டுள்ளார்.


Advertisement

Advertisement