இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜிவி பிரகாஷ், தனது முன்னாள் மனைவி சைந்தவி மற்றும் மகள் அன்வி குறித்து சமீபத்திய பேட்டியில் மனம் திறந்து பேசியுள்ளார். பள்ளிப் பருவத்திலேயே சைந்தவியை காதலித்த ஜிவி பிரகாஷ், பல ஆண்டுகள் நீடித்த காதலுக்கு பிறகு குடும்பத்தினரின் சம்மதத்துடன் அவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு அன்வி என்ற மகளும் உள்ளார். எனினும், சில ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றனர்.

இந்நிலையில் சைந்தவி குறித்துப் பேசிய ஜிவி பிரகாஷ், “சைந்தவியும், அன்வியும் எனது வாழ்க்கையில் மிகவும் ஸ்பெஷலானவர்கள். பள்ளியில் இருந்தே சைந்தவி எனக்கு தோழி. பின்னர் நாங்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். தற்போது விவாகரத்து பெற்றுவிட்டோம். அன்வியை கோ-பேரண்ட்டிங் முறையில் இருவரும் சேர்ந்து வளர்த்து வருகிறோம். நாங்கள் பிரிந்திருந்தாலும் சைந்தவியுடனான நட்பு எனக்கு முக்கியமானது” என்று தெரிவித்துள்ளார்.
‘வெயில்’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷ், தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து தனக்கென தனி இடத்தை பிடித்தார். இசையுடன் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் அவர், தற்போது ‘இம்மார்ட்டல்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் பிரிவு ஏற்பட்டாலும், மகளின் எதிர்காலத்திற்காக முன்னாள் மனைவியுடன் நட்பை தொடர்வதாக ஜிவி பிரகாஷ் வெளிப்படையாக கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
Listen News!