• Oct 13 2026

பகத் பாசிலின் புதிய படத்திற்கு வந்த சிக்கல்.. செப்டெம்பர் ரிலீஸ் திடீர் ரத்து.!

shali / 1 month ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பகத் பாசில், தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகிலும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். குறிப்பாக ‘புஷ்பா’ படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு ரசிகர்களிடமும் தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்நிலையில், பகத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படமான ‘டோண்ட் டிரபிள் தி டிரபிள்’ படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளது. இயக்குநர் ராஜமவுலியின் மகன் கார்த்திகேயா தயாரித்துள்ள இப்படத்தை ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ளார்.


மாயாஜாலம் மற்றும் பேன்டசி அம்சங்கள் கலந்த கதைக்களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இதில் பகத் பாசில் மேஜிக் கலைஞராக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் குழந்தை நட்சத்திரம் சாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருவரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள சுவாரஸ்யமான பயணமே படத்தின் முக்கிய கதைக்களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், பாலிவுட் நடிகர் சவுரப் சக்தேவாவும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் ஏற்கனவே ‘புஷ்பா’ படத்தில் பகத் பாசிலுடன் இணைந்து நடித்திருந்தார். படத்திற்கு கால பைரவா இசையமைத்துள்ளார்.

தெலுங்கில் உருவாகியுள்ள இப்படம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. முதலில் செப்டம்பர் 11-ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement