• Sep 01 2026

துல்கர் சல்மானுடன் இணைகிறாரா மமிதா பைஜு? பரபரப்பை கிளப்பிய புதிய தகவல்!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தென்னிந்திய ரசிகர்களிடம் பிரேமலு திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகை மமிதா பைஜு, அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில் வெளியான ‘டியூட்’ திரைப்படத்தின் வெற்றியும் அவரது திரைப்பயணத்திற்கு மேலும் கவனம் பெற்றுத் தந்தது.

இதனைத் தொடர்ந்து மமிதா பைஜுவுக்கு பல்வேறு மொழிகளில் முன்னணி பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக, அவர் நடித்த ஜனநாயகன், விஸ்வநாத் அண்ட் சன்ஸ், பெத்லேகேம் குடும்ப யூனிட் ஆகிய மூன்று திரைப்படங்களும் ரூ.100 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றதாக கூறப்படுகிறது.

இதன் மூலம் ஒரே ஆண்டில் மூன்று ரூ.100 கோடி வசூல் படங்களில் இடம்பெற்ற நடிகை என்ற சாதனையையும் மமிதா பைஜு பெற்றுள்ளார். இதனால் சமூக வலைதளங்களில் ‘MAMITHA BAIJU ERA’ என்ற பேச்சும் அதிகளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில், மமிதா பைஜுவின் அடுத்த திரைப்படம் தொடர்பாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கும் புதிய படத்தில் துல்கர் சல்மான் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியிருந்தன.


இந்த நிலையில், அந்தப் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக மமிதா பைஜுவை நடிக்க வைக்க படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தற்போது கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் துல்கர் சல்மான் – மமிதா பைஜு கூட்டணி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.

இதற்கிடையே, இயக்குநர் ஜீத்து மாதவன் தற்போது சூர்யா நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement