• Jan 18 2025

10 நாளுக்கு எந்த வேலையும் இல்லை.. அமெரிக்காவில் அரை டவுசருடன் அலையும் ‘எதிர்நீச்சல்’ ஈஸ்வரி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் ஈஸ்வரி என்ற கேரக்டரில் நடிக்கும் நடிகை கனிகா, அமெரிக்காவில் அரை டவுசருடன் அலையும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஏராளமான கமெண்ட் குவிந்து வருகிறது.

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியல் 700 எபிசோடுகளுக்கும் மேல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ட்விஸ்ட் வைத்து இயக்குனர் இந்த சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்கிறார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த சீரியலில் ஈஸ்வரி என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வரும் கனிகா ஏற்கனவே பல திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பாக சேரன் நடித்து இயக்கிய ’ஆட்டோகிராப்’ அஜித் நடித்த ’வரலாறு’ உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது கூட அவர் ’வெப்பன்’ என்ற தான் தமிழ் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவருக்கு மிகப்பெரிய புகழையும் பெயரையும் கொடுத்தது ‘எதிர்நீச்சல்’ சீரியல்தான் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கனிகாவுக்கு ஒரு மில்லியனுக்கு மேல் ஃபாலோயர்கள் இருக்கும் நிலையில் அவ்வப்போது தனது குடும்ப புகைப்படங்கள், வெளிநாட்டு சுற்றுலா சென்ற புகைப்படங்கள், வீடியோக்களை பதிவு செய்து வருவார்.

இந்த நிலையில் தற்போது அவர் குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்து உள்ள நிலையில் இன்னும் பத்து நாட்களுக்கு எந்தவித வேலையும் இல்லை என்றும் முழுவதுமாக அமெரிக்க சுற்றுப்பயணத்தை ரசிக்க போகிறோம் என்றும் கூறியுள்ளார். இந்த வீடியோவில் அவர் அரைக்கால் டவுசர் மற்றும் டிஷர்ட் அணிந்துள்ள நிலையில் இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

Advertisement

Advertisement