தளபதி விஜய் நேற்று தனது அரசியல் வருகையை அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில் ’தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியின் பெயரையும் வெளியிட்டார் என்பதை பார்த்தோம். மேலும் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் இன்னும் ஒரே ஒரு படம் மட்டும் தான் நடிக்க இருப்பதாகவும், அதன் பின்னர் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். 
தற்போது அவர் ’கோட்’ என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவரது அடுத்த படம் தான் கடைசி படம் என்பதும் இந்த அறிக்கையில் இருந்து தெரிய வருகிறது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை ராஜமவுலி இயக்கிய ’ஆர்ஆர்ஆர்’ என்ற படத்தை தயாரித்த டிவிவி என்ற பிரபல தெலுங்கு திரைப்பட நிறுவனம் தான் தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
 கிட்டத்தட்ட இந்த செய்தி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்நிறுவனம் தற்போது ஹங்ரி சேட்டா (Hungry Cheetah) என்ற டைட்டிலை பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தை தயாரிக்க இருக்கும் இந்நிறுவனம் விஜய்யின் படத்திற்காக தான் இந்த டைட்டிலை பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 
இந்த நிலையில் தனது அடுத்த படத்தை இயக்குவது யார் என்ற முடிவை இன்னும் சில நாட்களில் விஜய் எடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக கார்த்திக் சுப்புராஜ் தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவார் என்றும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் தெரிகிறது.
                             
                            
                            
                            
                                                    
                                            
                                            
                                            
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                                                
                
                
                
                
                
Listen News!