• Jun 23 2024

அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கா? நம்ப மறுக்கும் வைரல் போட்டோ

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவுக்கு ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி இருவருடன் இணைந்து நடித்த தளபதி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தான் அரவிந்த்சாமி. இந்த படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார் .

அதன் பிறகு ரோஜா படத்தில் ஹீரோவாக களமிறங்கி இருந்தார். இந்த படத்தில் அரவிந்த்சாமிக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இதில் இடம் பெற்ற பாடல்கள் அத்தனையுமே ஹிட் அடித்தன.

இதைத்தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய அரவிந்த்சாமி, 2006ம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவிலிருந்து தள்ளி இருந்தார்.

எனினும் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த கடல் படத்தில் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து தனி ஒருவன் படத்தில் வில்லனாக நடித்து சினிமாவின் டாப் வில்லன்களில் ஒருவராக இடம் பிடித்தார்.


1994 ஆம் ஆண்டு காயத்ரி ராமமூர்த்தி என்பதை திருமணம் செய்தார் அரவிந்த்சாமி. எனினும் 16 ஆண்டுகள் கழித்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். அதற்குப் பின் 2012 ஆம் ஆண்டு அபர்ணா என்பவரை திருமணம் செய்து கொண்டார் அரவிந்த்சாமி.

இந்த நிலையில், நடிகர் அரவிந்த்சாமி தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அரவிந்த்சாமிக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கின்றாரா என கேட்டு வருகின்றார்கள்.


Advertisement

Advertisement