• Jun 23 2024

அனுபமா பரமேஸ்வரன் லீட் ரோலில் நடிக்கும் லாக் டவுண் படத்தின் புது அப்டேட் !

Thisnugan / 1 week ago

Advertisement

Listen News!

இந்திய அளவில் தற்போது பிரபலமாகி வரும் பெண் முன்னணி கதைகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று எதிர்பாரா வசூல் சாதனைகளையும் செய்து வருகிறது.தமிழில் சிறப்பான கதைகளுடன் ஜோதிகா,நயன்தாரா, ஐஸ்வர்யா ராஜேஷ் என நடிகைகள் களமிறங்கி வெற்றியும் கண்டனர்.

Lockdown first look: Anupama Parameswaran showcases intense pain - Telugu  News - IndiaGlitz.com

அந்த வகையில் இந்த  ஆண்டு தமிழில் முன்னணி கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.லாக் டவுன் என பெயரிடப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் வெளியிட ஏ.ஆர்.ஜீவா இயக்குகிறார்.

Anupama Parameswaran's Lock Down Movie First Look Is Out - Cine Fellows

இந்த மாத இறுதியில் திரைக்கு வர இருக்கும் லாக் டவுன் படத்தின் புதிய அப்டேட் ஒன்று நேற்று வெளியானது. படத்தில் இடம் பெறும் லாவா லாவா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி அதிகமாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது.சித்தார்த் விபின் இசையில் சினேகனின் வரிகளில் உருவான பாடலை  பிரியா ஜெர்சன் பாடி அசத்தியுள்ளார்.


Advertisement

Advertisement