• Jan 19 2025

இந்த புகைப்படத்தில் இருக்கும் சின்ன பொண்ணு யாரு தெரியுமா? ட்ரெண்டிங்கின் உச்ச நடிகை

Aathira / 4 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் கேடி படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை தமன்னா. இதை தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன்  ஜோடி போட்டு நடித்து வந்தவர்.  

கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னாவுக்கு அந்த படம் தோல்வியை சந்தித்திருந்தாலும் அதன் பின்பு அவருடைய அழகை பார்த்து நிறைய வாய்ப்புகள் குவியத் தொடங்கின. கல்லூரி படத்தில் தனக்கு  திறமையும் இருக்கின்றது என நிரூபித்திருந்தார்.

இதை தொடர்ந்து விஜய், அஜித், கார்த்தி, ஜெயம் ரவி, ரஜினி என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தெலுங்கிலும் கால் பதித்த தமன்னா அங்கும் வெற்றி கொடியை நாட்டினார். அதன் பின்பு தமிழில் அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இதனால் பாலிவூட் பக்கம் திரும்பினார்.


இதையடுத்து ஜெயிலர் படத்தின் மூலம் நெல்சன் திலீப்குமார் மீண்டும் தமன்னாவை தமிழுக்கு அழைத்து வந்தார். அந்த படத்தில் அவர் ஆடிய காவாலா பாடல் ட்ரெண்டிங்கின் உச்சத்துக்கே சென்றது. அவரது நடனத்தை பார்த்த ரசிகர்கள் சொக்கி போயினர். 

அதன் பின்பு  தமன்னா குத்தாட்டத்துக்கு பெயர் போனவராக காணப்பட்டார். இறுதியாக சுந்தர்சி நடிப்பில் அரண்மனை 4 படத்தில் நடித்திருந்தார். இந்த படமும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று சுமார் 100 கோடி வரை வசூலித்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது நடிகை தமன்னா தனது சிறு வயது புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். அதில் அவருடைய  அம்மாவுடன் மிகவும் க்யூட்டாக இருக்கின்றார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இது  நீங்க தானா என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.

Advertisement

Advertisement