• Oct 30 2024

சீதா ராமம் திரைப்பட நடிகை திருமணம் செய்யப்போகும்தெலுங்கு நடிகர் யார் தெரியுமா?- இந்த டுவிஸ்டை எதிர்பார்க்கலையே..

stella / 11 months ago

Advertisement

Listen News!

மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த மிருணாள் தாகூர், 2012 ஆம் ஆண்டு, ஹிந்தி சீரியல் மூலம் சின்னத்திரை நாயகியாக தன்னுடைய நடிப்பு பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டவர். இதை தொடர்ந்து, மராத்தி திரைப்படத்தில் 2014-ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார்.

இவரின் எதார்த்தமான நடிப்பால், கவர்த்திழுக்கப்பட்ட, இயக்குனர் சோனியா குப்தா 2018 ஆம் ஆண்டு, பாலியல் தொழிலாளர்கள் வாழ்க்கையை விவரிக்கும் விதமாக எடுக்கப்பட்ட 'லவ் சோனியா' படத்தின் மூலம் பாலிவுட் திரையுலகில், மிருணாள் தாகூரை அறிமுகம் செய்தார்.


இதனை அடுத்து இவர் பல படங்களில் நடித்து வந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமாக்கியது ‘சீதாராமம்’ திரைப்படம் தான்.சமீபத்தில் நடந்த ஒரு விருது விழாவில் ‘சீதாராமம்’ படத்துக்காக சிறந்த நடிகைக்கான விருதை மிருணாள் தாக்குர் பெற்றார்.

அப்போது விருதை அளித்த அல்லு அரவிந்த், மிருணாள் தாகூர் தெலுங்கு மணமகனைப் பார்த்து சீக்கிரம் திருமணம் செய்துகொண்டு ஹைதராபாத்தில் செட்டில் ஆக வேண்டும் என்று கூறினார்.

இதற்கு சிலர், மிருணாள் தாகூர் தெலுங்கு நடிகர் ஒருவரை திருமணம் செய்யபோகிறார் என்று தகவல் வெளிவந்தது.இந்நிலையில் இது தொடர்பாக பேசிய மிருணாள் தாகூர், நான் தெலுங்கு நடிகரை காதலிக்கவில்லை, திருமணம் செய்யவில்லை. அந்த விழாவில் அல்லு அரவிந்த் விளையாட்டாக பேசினார் அவ்ளோ தான் என்று விளக்கம் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement