• May 12 2025

"மைனா" பட நடிகரின் புதிய அவதாரம்..! என்ன தெரியுமா...?

subiththira / 2 hours ago

Advertisement

Listen News!

2010ம் ஆண்டு பிரபு சாலமன் இயக்கத்தில் வந்த ‘மைனா’ திரைப்படம், தமிழ் சினிமாவில் கதையின் போக்கையும், கதாநாயகியின் படைப்பாற்றலையும் புதிய உயரத்திற்கு எடுத்துச் சென்றது. இதில் பாஸ்கர் என்ற பொலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் அபார நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் சேது. அவரது இயல்பான நடிப்பு, ஆளுமை மிக்க வெளிப்பாடுகள் மற்றும் கதைக்கான அவரது பங்களிப்பு என்பன ரசிகர்களிடம் நல்ல பெயரையும் மதிப்பையும் பெற்றுக் கொடுத்தது.

இந்த ஒரு படமே அவரது திரையுலக வாழ்க்கைக்கு அடையாளமாக இருந்து வந்த நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் நடிப்பிற்கு திரும்பியிருக்கிறார். ஆனால், இப்போது ஓர் வித்தியாசமான மாற்றத்துடன் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


"மையல்" என்பது காதல், உளவியல், சமூக உணர்வுகள் ஆகியவற்றை ஒருங்கிணைத்துத் தோன்றும் ஒரு உணர்வு பூர்வமான திரைப்படமாகும். இத்திரைபடத்தில் பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பதாகவும் படக்குழு தெரிவித்துள்ளது.

"மையல்" திரைப்படத்தில் சேது ஒரு மென்மையான, கலாச்சாரத்துடன் கூடிய நவீன காதலனாக நடிக்கும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதனை தற்பொழுது வெளியான தகவல் மூலம் அறியமுடிகிறது. அத்துடன் மைனா படத்தைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அதிகளவான வரவேற்பினைப் பெற்றுக் கொள்ளும் படமாக இது விளங்கும் என சிலர் தெரிவித்துள்ளனர். இப்படத்தினை விரைவில் திரையரங்குகளில் வெளியிடப் போவதாகவும் படக்குழுவினர் கூறியுள்ளனர்.


Advertisement

Advertisement