• May 26 2025

பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்த லோகேஷ் கனகராஜின் புதிய அவதாரம்..! என்ன தெரியுமா..?

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெற்றிக்குப் பெயர்போன இயக்குநர்களில் ஒருவர் லோகேஷ் கனகராஜ். கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர், தற்போது நடிகராக புதுப் பயணத்தைத் தொடங்க இருக்கிறார் என்ற தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

இப்பொழுது கிடைத்துள்ள உறுதியான தகவல்களின் படி, லோகேஷ் கனகராஜ் தனது அடுத்த படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இது தான் அவருடைய முதல் ஹீரோவாக அறிமுகமாகும் முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய முயற்சியினை பிரபல தயாரிப்பு நிறுவனமான Sun Pictures தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


அத்துடன் இப்படத்தை வேறு ஒரு இயக்குநர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. ஏனெனில், ஒரு வெற்றிகரமான இயக்குநர், மற்றொரு இயக்குநரின் கைப்பிடியில் ஹீரோவாக நடிப்பது என்பது தமிழ் சினிமாவில் மிகவும் அபூர்வமான விடயமாகும். இந்த இயக்குநர் யார் என்பது குறித்து தற்போது வரை அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகராக எடுத்த புதிய முயற்சி தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய அனுபவமாக இருப்பதுடன் இயக்குநரிலிருந்து நடிகராகச் செல்லும் இந்த பயணத்திற்கு ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement