பாலிவுட்டில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொண்டிருக்கும் நடிகர் அமீர் கான், வெறும் நடிகராக மட்டுமின்றி சமூகப் பொறுப்புள்ள கலைஞராகவும் அறியப்படுகிறார். அவரது சிந்தனைகள், சமூகக் கோணத்தில் மையப்படுத்தப்படும் கருத்துகளுக்கு எப்பொழுதும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. சமீபத்தில் மும்பையில் நடைபெற்ற WAVES மாநாட்டில் பங்கேற்ற அமீர் கான், இந்திய திரையரங்குகளின் பற்றாக்குறை மற்றும் அதன் விளைவுகளைப் பற்றி விளக்கமாகப் பேசியுள்ளார்.
அமீர் கான் தனது உரையில், இந்தியாவில் திரையரங்குகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளதாகக் கூறியிருந்தார். மேலும், "நம் நாட்டின் பரப்பளவும் மக்கள்தொகையும் பெரிது. ஆனால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதற்கு ஏற்ற அளவில் இல்லை. சுமார் 10,000 திரையரங்குகள் தான் இந்தியா முழுவதும் உள்ளன," என அவர் கூறினார். அதில் பாதி தெற்குப் பகுதியில் உள்ளன என்றும், மீதமுள்ளவை மற்ற மாநிலங்களில் தான் காணப்படுகின்றன என்றும் கூறியிருந்தார்.
அமீர் கான் மேலும் கூறுகையில், "அமெரிக்கா, மக்கள் தொகையில் நம் நாட்டை விட மூன்றில் ஒரு பங்கே கொண்டது. ஆனால் அவர்கள் நாட்டில் 40,000 திரையரங்குகள் உள்ளன. அதைவிட சீனாவில் 90,000 திரையரங்குகள் உள்ளன," என வருத்தமுடன் குறிப்பிட்டார்.
இந்த இரண்டு நாடுகளும் இந்தியாவை விடச் சிறிய பொருளாதாரங்களாகத் தொடங்கியிருந்தாலும், தற்போது திரையரங்குகளின் அடிப்படையில் பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளன. இது மக்கள் மற்றும் சினிமாவுக்கிடையிலான தொடர்பை நிலைநாட்டும் முக்கிய காரணமாகும் என்றும் கூறியிருந்தார்.
Listen News!