• Dec 21 2024

வைரலாகும் "அமரனின் இந்து" புகைப்படம்! படத்தை பார்த்து கண்கலங்கிய கமலஹாசன்! என்ன சொன்னார் தெரியுமா?

subiththira / 2 months ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கமலின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் தான் அமரன். ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 


மறைந்த ராணுவ வீரரான முகுந்த் வரதராஜன் என்பவரின் வாழ்க்கை வரலாற்று திரைப்படம் தான் இந்த அமரன். முதல் முறையாக சிவகார்த்திகேயன் இப்படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். அதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து இப்படத்திற்காக அயராது உழைத்து தயாராகி இருக்கின்றார் சிவகார்த்திகேயன்.


இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக உருவாகி வந்த இப்படம் ஒருவழியாக தற்போது திரையில் வெளியாக உள்ளது. வருகின்ற தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையில் வெளியாகவுள்ளது. தயாரிப்பாளரான கமலே இப்படத்தை ரிலீஸ் செய்யவும் முடிவெடுத்திருக்கிறார். அந்தளவிற்கு படம் அவருக்கு நம்பிக்கையை கொடுத்துள்ளதாம்.


இந்நிலையில் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மனைவியாக நடிக்கும் சாய்பல்லவி இந்து என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் அமரன் கிளைமாக்ஸ் காட்சியை பார்த்து கண்கலங்கினாராம் கமல். அந்தளவிற்கு படம் எமோஷனலாக இருந்ததாம். மேலும் படம் பார்த்து முடித்துவிட்டு சிவகார்த்திகேயனை கட்டியணைத்து கமல் பாராட்டியதாகவும், அதனால் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியடைந்ததாகவும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement