பிரபல சமையல் கலைஞராகவும், தொலைக்காட்சிகளில் தனக்கென ஒரு தனி இடத்தை உருவாக்கியவராகவும் விளங்கும் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா திருமண மோசடி குறித்த புகாரை தமிழக மாநில மகளிர் ஆணையத்தில் அளித்துள்ளார். இந்த புகார் சினிமா மற்றும் செய்தித்துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மாநில மகளிர் ஆணைய அலுவலகத்தில், புகழ்பெற்ற வழக்கறிஞர் மற்றும் மக்களவை உறுப்பினராகவும் செயல்பட்டு வரும் சுதா அவர்களுடன் வந்த ஜாய் கிரிஸில்டா நேரில் சென்று புகார் மனுவை அளித்தார்.
இந்த மனுவில், "மாதம்பட்டி ரங்கராஜ், திருமணம் செய்யும் வாக்குறுதி அளித்து என்னிடம் நெருக்கமான உறவில் ஈடுபட்டார். பின் என்னை ஏமாற்றி விட்டு முதல் மனைவியிடம் சென்று விட்டார். தற்போது எனது வயிற்றில் வளரும் குழந்தையை கலைக்குமாறு நிர்ப்பந்தியிருக்கிறார்..." எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த புகார் குறித்த மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!