• Feb 22 2025

பிரபு தேவாவின் நிகழ்ச்சியில் பங்கேற்க மறுத்த நடிகை! யார் தெரியுமா?

subiththira / 19 hours ago

Advertisement

Listen News!

சென்னையில் சமீபத்தில் நடைபெறவிருந்த  பிரபு தேவாவின் நிகழ்ச்சி எதிர்பாராத விதமாக பரபரப்பாக மாறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பிரபல நடிகை சிருஷ்டி கலந்துகொண்டிருந்த நிலையில், நிகழ்ச்சி தொடங்கும் முன்னரே அவர் அந்நிகழ்ச்சியில் இருந்து விலகியமை  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் திரையுலக வட்டாரங்களிலும் பேசப்பட்டு வருகிறது. நடிகர், நடன இயக்குநர், மற்றும் இயக்குநராக வலம் வரும் பிரபு தேவா நிகழ்ச்சி ஏற்பாட்டில் முக்கியமான பங்கு வகித்த நிலையில் அந்நடிகை திடீர் என விலகியமை  ரசிகர்களிடையே பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை ஓய்ம்பீசர் மைதானத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரபு தேவா மற்றும் பல பிரபலங்கள் பங்கேற்றனர். நடிகை சிருஷ்டி  மேடையில் ஒரு சிறப்பான நடனம் வழங்க இருந்தார். ஆனால் அதற்கு முன்பாகவே, சில சிக்கல்களை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பிரபு தேவா மற்றும் மற்ற ஏற்பாட்டாளர்கள் சிறிய அளவில் பதற்றத்திற்கு உள்ளாகினர் என கூறப்படுகிறது.


இந்த விவகாரம் திரைத்துறையில் புதிய பரபரப்பாகிவிட்டது. இது பாலிவுட்டிலும், தமிழ் சினிமா ரசிகர்களிடையும் இது பெரிய விவாதமாக மாறியுள்ளது.

Advertisement

Advertisement