• Feb 22 2025

"டிராகன்" பட ரிலீஸில் புதிய மாற்றம்.. – தயாரிப்பாளர் எடுத்த அதிரடியான முடிவு!

subiththira / 20 hours ago

Advertisement

Listen News!

திரைத்துறையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள "டிராகன்" படம் வெளியீட்டிற்கு தயாரான  நிலையில் உள்ளது. இப்படம் எதிர்பார்ப்புடன் உருவாகியிருப்பதுடன் படத்தின் ஓவர் சீசை பல நாடுகளில் மிகப்பெரிய அளவில் வெளியிடப்போவதாக  தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய சினிமாவில் பெரிய பட்ஜெட் படங்களுக்கு மட்டுமே உலகளவில் பெரிய அளவில் வெளியீடு கிடைக்கும். ஆனால், "டிராகன்" படத்திற்கான மாபெரும் எதிர்பார்ப்பு காரணமாக, இதன் ஓவர் சீசை பல நாடுகளில் நேரடியாக வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, இலங்கை ,சிங்கப்பூர், மலேஷியா போன்ற நாடுகளில் வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


சமீபகாலமாக, சில பெரிய தயாரிப்பாளர்கள் படத்தின் ஓவர் சீசை வெளியிட எந்த பெரிய விநியோகஸ்தர்களையும் நாடாமல் தாங்களாகவே வெளியிட முன்வந்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் , படத்தின் முழு லாபத்தையும் தயாரிப்பாளர்களே பெற விரும்புகிறார்கள் என்பதே ஆகும்.

"டிராகன்" படத்தின் தயாரிப்பாளரும் இதனாலேயே படத்தின் ஓவர் சீசை தாங்களாகவே வெளியிட முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்பு, இதே முறையில் வெளியிடப்பட்ட "விடாமுயற்சி" படத்தினை தயாரிப்பாளர் நேரடியாக வெளியிட்டார். அந்தப் படம் தயாரிப்பாளருக்கு படுதோல்வியை கொடுத்திருந்தது. இந்நிலையில், "டிராகன்" படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இந்த படம் அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தரும் என எதிர்பார்க்கின்றனர்.








Advertisement

Advertisement