• May 19 2024

முதன்முறையாக நயன்தாராவுடன் இணையும் சண்டைக்கோழி பட நடிகை- அதுவும் என்ன படத்தில் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நயன்தாரா. சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தோல்வியையே சந்தித்து வருகின்றன. தற்பொழுது மார்க்கெட்டிலும் சரிவைச் சந்தித்துள்ளார்.

நயன்தாரா தற்போது கமிட்டாகியுள்ள படங்களில் ஒன்று டெஸ்ட். Y Not ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் சசிகாந்த் இப்படத்தை இயக்குகிறார்.இப்படத்தில் மாதவன் மற்றும் சித்தார்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் பிரபல பின்னணி பாடகி ஷக்தி ஸ்ரீ கோபாலன் இசையமைக்கிறார். 


இதன்முலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக ஷக்தி ஸ்ரீ கோபாலன் அறிமுகமாகிறார்.இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகை மீரா ஜாஸ்மின் நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.


சண்டைக்கோழி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான மீரா ஜாஸ்மின் பல ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் நடிகை மீரா ஜாஸ்மின். இதனால் டெஸ்ட் படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement