ரெபெல் என்பது நிகேஷ் ஆர்எஸ் எழுதி இயக்கிய ஒரு அரசியல், நாடக தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் , மமிதா பைஜு , வெங்கடேஷ் விபி, ஷாலு ரஹீம், கருணாஸ், ஆதித்யா பாஸ்கர், கல்லூரி வினோத், சுப்ரமணிய சிவா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் பேனரில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.
கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை கதைக்களமாக கொண்டெடுக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை விமர்சனத்தின் ஊடாக பார்க்கலாம்.
தமிழ் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மற்றும் அவருடைய பிள்ளைகள் கல்லூரியில் போராடும் அவல நிலை தான் படத்தின் மையக்கரு.
இதில் ஜிவி பிரகாஷ் கல்லூரி மாணவனாக காணப்படுகிறார். இவர் மூணாறில் இருந்து கேரளா கல்லூரியில் படிப்பதற்காக இணைகிறார். ஜிவி பிரகாஷ் உடன் அவருடைய நண்பர்களும் கல்லூரிக்கு செல்கிறார்கள்.
கேரளா கல்லூரியில் ஆசிரியர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவருமே தமிழர்களை இழிவாக நடத்துகிறார்கள். அப்போது மலையாள ஹீரோயினாக மமிதாபாஜி வருகிறார். அதன்பின் ஹீரோவான பிரகாஷை காதலிக்கிறார்.
ஒரு கட்டத்தில் தமிழர்களை மலையாளிகள் மட்டம் தட்டிக் கொண்டே இருக்கிறார்கள் இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஹீரோவும் அவருடைய நண்பர்களும் திருப்பி பதில் கொடுத்தார்களா? இல்லையா? இதனால் என்ன பிரச்சினை வருகிறது என்பதே மீதி கதை.
இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் ஆக்சன் ஹீரோவாகவும் ஜி. பிரகாஷ் நடித்துள்ளார். பின்னணி இசையும் இவரே இசையமைத்திருப்பதால் சிறப்பாக உள்ளது.
இவரை அடுத்து கதாநாயகியான மமிதா தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துள்ளார். ஆனால் இவருடைய கதாபாத்திரத்திற்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
இந்தக் கதை உண்மையான கதையை மையமாகக் கொண்டு எடுத்ததால் இதற்கு இயக்குனர் அதிகமாகவே உழைத்துள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
முதல் பாதி விறுவிறுப்பாக சென்றாலும் இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் தேவைப்படுகிறது. மொத்தத்தில் நீண்ட இடைவெளிக்கு பின் ஜிவி பிரகாஷிற்கு இது ஒரு நல்ல கம்பேக் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!