• Apr 25 2024

ஓட்டோ சாரதியாக மாறிய 'ஈரமான ரோஜாவே-2' காவியா... தீயாய் பரவும் வீடியோ...!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு அதன் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரியல்லா. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.


அந்தவகையில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடர்களில் ஒன்று 'ஈரமான ரோஜாவே'. இந்த தொடரின் முதல் பாக வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கேப்ரியல்லா, காவ்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.


சீரியலைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது ஓட்டோ சாரதியாக மாறி ஓட்டோ ஓடும் வீடியோவை வெளியிட்டிருக்கின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலை விடுத்து இப்போ இந்தத் தொழிலில் இறங்கிட்டீங்களா எனக் கிண்டலாக கேட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement

Advertisement