• Jan 19 2025

புளித்து போன திரைக்கதை தான்.. ஆனால் பிரஷ்ஷாக கொடுத்த இயக்குனர்.. ‘பிரேமலு’ திரை விமர்சனம்..!

Sivalingam / 10 months ago

Advertisement

Listen News!

கடந்த சில ஆண்டுகளாகவே மலையாள திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வருகின்றன என்பதும் தமிழ் திரைப்படங்கள் போல் அல்லாமல் மிகக்குறைந்த பட்ஜெட்டில் எடுத்து மிகப்பெரிய லாபத்தை பெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்திய திரையுலகிற்கு  ஒரு வழிகாட்டியாக மலையாள திரை உலகம் இருந்து வருகிறது என்பதும் மலையாளத்தில் வரும் படங்களின் பாசிட்டிவ் என்பது அந்த படங்களின் அழுத்தமான கதை தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் வெளியானபிரேமலுஎன்ற திரைப்படம் மலையாளத்தில் மட்டுமே 100 கோடி ரூபாய் வசூல் செய்த நிலையில் தற்போது தமிழிலும் ரிலீஸ் ஆகி உள்ள நிலையில் இந்த படத்தின் விமர்சனம் எப்படி என்பதை தற்போது பார்ப்போம்.

கேரளாவில் கல்லூரியில் படிக்கும் நாயகன் சச்சின் வெளிநாடு செல்ல ஆசைப்படும் நிலையில் அதில் அவருக்கு ஏமாற்றம் ஏற்படுகிறது. அதன் பின்னர் நண்பர்களுடன் இணைந்து ஹைதராபாத்தில் ஒரு கோச்சிங் சென்டரில் கேட் தேர்வு எழுத வரும் நிலையில் அதுவும் அவருக்கு சரிப்பட்டு வரவில்லை.

இதனை அடுத்து தற்செயலாக திருமண நிகழ்ச்சிக்கு செல்லும் போது தான் அங்கே நாயகி மமிதா பாஜுவை பார்க்கிறார். பார்த்தவுடனே காதல் கொள்ளும் அவர் தனது வாழ்க்கையில் உள்ள ஒரே லட்சியம் அந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்வதுதான் என்று முடிவு செய்கிறார். ஆனால்  மமிதா   பாஜுவிடம் பேசும்போது அவர் தனது வருங்கால கணவனுக்கான தகுதிகளை அடுக்க, அதில் ஒன்று கூட தன்னிடம் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.



இதனை அடுத்து அவர் நாயகியை காதல் வசப்படுத்தினாரா? என்பதை காமெடி கலந்து கூறியிருக்கும் படம் தான்பிரேமலு. ஒரு காதலியை தன் வசப்படுத்த காதலன் செய்யும் முயற்சிகள் என்பது நூறாண்டு சினிமாவில் புதிது அல்ல . பல திரைப்படங்களில் புளித்துப்போன கதை தான் இந்த படத்தின் கதை என்றாலும் பிரஷ்ஷாக இளைஞர்களை கவரும் வகையில் திரைக்கதை அமைத்தது தான் இந்த படத்தின் இயக்குனர் கிரிஷ் அவர்களின் மேஜிக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சீரியசான சமையல் நிகழ்ச்சியில் காமெடியை கலந்து குக் வித் கோமாளி கொடுத்தது போலவே ஒரு சீரியசான காதல் கதையில் நகைச்சுவையை ஆங்காங்கே இணைத்து இந்த படத்தை நகர்த்தி இருப்பது தான் இயக்குனரின் மிகப்பெரிய திறமை. ஒவ்வொரு காமெடி காட்சியிலும் விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.

ஹீரோயின் என்ட்ரி என்பது கொஞ்சம் காலதாமதம் ஆனாலும் ஹீரோயின் படத்தில் என்ட்ரி ஆனவுடன் படம் சுறுசுறுப்பாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. காதலர்களுக்கு மட்டுமே படத்தை உருவாக்காமல் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் படத்தை எடுத்ததால் தான் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருவதற்கு முக்கிய காரணம்.

 இந்த படத்தை இளைஞர்கள் முதல் குடும்ப ஆடியன்ஸ் வரை கொண்டாடி வருவதற்கு மிகப்பெரிய காரணம் படத்தின் எந்த இடத்திலும் திரைக்கதை தொய்வு இல்லாமல் நகர்ந்து கொண்டிருப்பது தான். நிச்சயமாக தமிழிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement