• Jan 19 2025

ஜீவா கர்ப்பமா? மனோஜ் சொன்ன அதிர்ச்சி தகவல்.. ரோஹினிக்கு தெரிஞ்சா என்ன நடக்கும்?

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு வருவார்கள் என்பதும் அவை வைரலாகி வரும் என்பதும் தெரிந்தது.

அந்த வகையில் இந்த சீரியலில் அண்ணாமலை - விஜயா தம்பதியின் மூத்த மகனாக மனோஜ் கேரக்டரில் நடித்து வரும் ஸ்ரீதேவா சற்றுமுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜீவா அருகில் உட்கார்ந்து இருப்பது போன்ற ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் ’எல்லாமே தற்காலிகம்தான் ஆனால் எனது உயிர் தோழி மட்டும் கர்ப்பம் என்று கூறியபோது ஜீவா அவரை அடிக்கப் போகும் போது நிரந்தரம்’ அதாவது ஆங்கிலத்தில் Everything is temporary but My best friend is pregnant ( permanent ) என்று கூறிய  காமெடி வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் கனடாவில் இருந்து சென்னைக்கு ஜீவா திரும்பி வந்த காட்சிகள், அவரை மனோஜ் மற்றும் ரோகிணி மிரட்டி 30 லட்சத்தை வாங்கிய காட்சிகள் இடம் பெற்றன. தற்போது அந்த 30 லட்சத்தை வைத்து தான் மனோஜ் பிசினஸ் செய்ய இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர் ஒழுங்காக பிசினஸ் செய்வாரா? அல்லது பணத்தை யாரிடமாவது கொடுத்து ஏமாந்து விடுவாரா? என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் தான் பார்க்க முடியும்.


Advertisement

Advertisement