• Apr 27 2024

ஆடுஜீவிதம் படம் எப்படி தெரியுமா? வெளியானது முதல் விமர்சனம்

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

நடிகர் பிருத்விராஜ் மற்றும் அமலாபால் நடித்துள்ள படம் தான் ஆடுஜீவிதம்.  இந்த படம் எதிர்வரும் மார்ச் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் கதை மிகவும் வலிமையான ஒன்றாக காணப்படுவதால் அடுத்த ஆண்டு ஆஸ்காருக்கு பரிந்துரைக்கப்படும் என கூறப்பட்டது.

'ஆடுஜீவிதம்'  படத்தின் கதைக்களம், வேலை நிமித்தமாக வெளியூர் செல்லும்  பிருத்விராஜ், தனது மனைவி அமலாபாலை  பிரிந்து பாலைவனத்தில் சிக்கித் தவிக்கும் அவஸ்தை நிறைந்த வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்திற்காக உடல் மெலிந்து ஓடாகத்தேய்ந்து தன்னை வருத்தி இதுவரை இல்லாத அளவுக்கு கஷ்டப்பட்டு நடித்துள்ளார்  பிருத்விராஜ். இந்த படத்துக்கு அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


அண்மையில் வெளியான 'ஆடுஜீவிதம்' படத்தின்  டிரெய்லர் முழுவதும் மண்புழுதி நிறைந்த  மரியான் படத்தில் தனுஷ் இருப்பது போலவே சித்தரிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், ஆடுஜீவிதம் படத்தின் முதல் விமர்சனம் பற்றி படத்தைப் பார்த்த பத்திரிகையாளர் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதன்படி அவர் கூறுகையில்,


ஆடுஜீவிதம் என்ற அற்புதமான படத்தை பார்த்தேன். விஷுவல் காட்சிகள் பிரமாதமாக உள்ளது. அதில் பிருத்விராஜின் கடின  உழைப்பு, அர்ப்பணிப்புக்கு எனது பாராட்டுக்கள். மேலும்  அற்புதமான இசையுடன் இந்த படத்திற்கு உயிர் கொடுத்துள்ளார் ஏ ஆர் ரகுமான். உண்மைக் கதையை வலிமையாக சொல்லிய இயக்குனர் அவர்களுக்கும் நன்றி. ஒளிப்பதிவு இணையற்றவை. கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் எனக் கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement