• Jan 19 2025

’சிறகடிக்க ஆசை’ ஸ்ருதிக்கு ஒரு குட்டிப்பையன் இருக்கானா? அதிர்ச்சி வீடியோ..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ என்ற சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் டிஆர்பியில் முன்னணி இடத்தை தொடர்ந்து பிடித்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம்.

அண்ணாமலை - விஜயா,  முத்து - மீனா, மனோஜ் - ரோகிணி மற்றும் ரவி - ஸ்ருதி ஆகிய எட்டு முக்கிய கேரக்டர்களும் சில துணை கேரக்டர்களையும் வைத்து இந்த சீரியல் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பது ஒவ்வொரு வாரமும் ஒரு பிரச்சனை மற்றும் அந்த பிரச்சனைக்கு அந்த வாரமே தீர்வு என்று உடனுக்குடன் இழுவை இல்லாமல் முடிவு பெற்று வருவது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்த நிலையில் இந்த சீரியலில் நடிக்கும் அனைத்து நட்சத்திரங்களும் தற்போது இணையத்தில் பிரபலம் ஆகி விட்டார்கள், அவர்களுடைய சமூக வலைதளத்தில் ஃபாலோயர்கள் குவிந்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி முத்து, மீனா கேரக்டரில் நடிக்கும் வெற்றி வசந்த் மற்றும் கோமதி பிரியா,  மனோஜ் - ரோகிணி கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவா மற்றும் சல்மா  மற்றும் ரவி - ஸ்ருதி கேரக்டரில் பிரீத்தா ஜனார்த்தனன் மற்றும் பிரணவ் மோகன் ஆகியவர்கள் தற்போது விளம்பரத்திலும் நடித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் நேற்று ஸ்ரீ தேவா மற்றும் சல்மா நடித்த தங்க நகை விளம்பர வீடியோ வைரலான நிலையில் தற்போது ரவி ஸ்ருதி நடித்த விளம்பர வீடியோ அவர்களது சமூக வலைதளங்கள் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவில் குறிப்பிட்ட ஒரு கடையில் பர்சேஸ் செய்தால் கிரிக்கெட் பேட், பால் ஃப்ரீயாக கொடுக்கிறார்கள் என்று ரவி கூற, அப்போது ஸ்ருதி எங்கள் வீட்டில் ஒரு குட்டி பையன் இருக்கிறான், அவனுக்கு இந்த பேட்டையும் பாலையும் கொடுத்து விடுவோம் என்ற கூறும் காட்சிகளும் அவர்கள் பர்சேஸ் செய்யும் காட்சிகளும் உள்ளன. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement

Advertisement