விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்றைய எபிசோடில் மாப்பிள்ளை வீட்டார் பெண்ணை அழைக்க வரும் நேரத்தில் கடன்காரர்கள் கத்திக் கொண்டிருந்தபோது மாப்பிள்ளை வீட்டார் வருவதும் அவர்கள் ஏன் கத்துகிறார்கள் என்று மீனா மற்றும் குயிலி சந்தேகப்படுவதும் அவர்களை பாக்கியம் சமாளிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
சரவணன் மற்றும் தங்கமயில் ஆகிய இருவருக்கும் திருமணம் நடைபெறவுள்ள நிலையில் பெண்ணை அழைப்பதற்காக பாண்டியன் வீட்டில் இருந்து வருகின்றனர். அப்போது கடன்காரர்கள் பாக்கியம் வீட்டு வாசலில் நின்று கத்திக் கொண்டிருக்கும் நிலையில் பாக்கியம் மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் கடன்காரர்களை சமாதானப்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் பணத்தை வாங்காமல் இருந்து செல்ல மாட்டோம் என்று அவர்கள் கூறியதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் பெண்ணை அழைப்பதற்காக மீனா, ராஜி, குயிலி, கதிர், செந்தில், குயிலியின் கணவர், உள்பட ஒரு சிலர் வரும் நிலையில் அவர்கள் கடன்காரர்கள் கத்தி கொண்டிருப்பதை பார்க்கின்றனர். என்ன ஏது என்று அவர்கள் கேள்வி எழுப்ப ,பாக்கியம் அவர்களை சமாளித்து உள்ளே அழைத்துச் செல்கிறார். அவர்களிடம் வெளியே கத்தி கொண்டிருப்பவர்கள் தனது உறவினர்கள் என்றும் தங்கமயிலை அவருடைய மகனுக்கு பெண் கொடுக்கவில்லை என்பதால் கோபப்பட்டு கத்துகிறார்கள் என்றும் கூறி சமாளிக்கிறார்.
ஆனால் வழக்கம் போல் மீனாவுக்கு சந்தேகம் வந்துவிட்டது, பெண் கொடுக்கவில்லை என்பதற்காக இப்படி கத்துவார்களா? ஒருவேளை மண்டபத்தில் வந்து பெண்ணை தூக்கி விட்டு சென்றால் என்ன செய்வது? என்று கேட்க குயிலியும் மீனா சந்தேகத்திற்கு ஆதரவு கொடுக்கிறார். மீனா மற்றும் குயிலிக்கு மட்டுமே சந்தேகம் வந்துள்ள நிலையில் மற்றவர்களும் அதெல்லாம் ஒன்றும் இருக்காது என்று சமாதானம் செய்கிறார்கள். இருப்பினும் இருவருக்கும் சந்தேகம் தீரவில்லை.
இந்த நிலையில் தங்கமயில் திடீரென சரவணனுக்கு ஃபோன் செய்து கல்யாணத்தில் எதுவும் பிரச்சனை வந்தால் என்னை விட்டு செல்வீர்களா என்று அழுது கொண்டே கேட்க, அது எப்படி உன்னை விட்டு செல்வேன், கடைசி வரைக்கும் உன்னோடு தான் இருப்பேன்’ என்று ஆறுதல் கூறுகிறார்.
இந்த நிலையில் மீனா மற்றும் குயிலி மேலும் சந்தேகம் வருமா? பாக்கியம் அவர்கள் இருவரையும் எப்படி சமாளிப்பார்? எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சரவணன் தங்கமயில் திருமணம் நடக்குமா? என்பதை அடுத்தடுத்த எபிசோடுகளில் பார்ப்போம்.
Listen News!