• Jan 19 2025

ஸ்ருதிக்கு போட்டியாக தங்கத்தை வாரிக் குவிக்கும் ரோகிணி.. அடுத்து விஜயா தலை மேல நின்னு ஆடுவாங்க போல..!!

Aathira / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கிலும் படிப்படியாக முன்னிலை வகித்து வருகின்றது.

சிறகடிக்க ஆசை சீரியலில் முக்கிய கேரக்டரில் முத்து, மீனா நடித்து வருகின்றார்கள். அதாவது முத்து கதாபாத்திரத்தில் வெற்றி வசந்தும், மீனா கதாபாத்திரத்தில் கோமதி பிரியாவும் நடித்து வருகின்றார்கள். இவர்களின் நடிப்பு மட்டுமின்றி கோபம், ரொமான்ஸ், அன்பு என அத்தனையும் ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகின்றது.

இதை அடுத்த ஹீரோயின், ஹீரோவாக ரோகிணியும் மனோஜும் காணப்படுகின்றார்கள். இவர்கள் இருவரின் கேரக்டரும் ஒன்று போலவே காணப்படுகிறது. அதாவது திருட்டு வேலை பண்ணுவது, ஏமாற்றுவது என்று ஒரே குணம் உடையவர்களாக காணப்படுகின்றார்கள்.


மனோஜின் முன்னாள் காதலி 30 லட்சத்தை கொடுத்தபோதும், தனது அப்பாவுக்கு கொடுக்க வேண்டிய காசை கொடுக்காமல் ரோகிணியின் பேச்சை கேட்டு ஏமாற்றுகிறார் மனோஜ். அதை வைத்து பிசினஸ் தொடங்கப் போவதாக திட்டம் போடுகிறார். ஆனால் என்ன பிசினஸ் என்று பிளான் போட முன்னே கார் ஒன்றை வாங்கி உள்ளார்.


இந்த நிலையில், தற்போது ரோகிணி கேரக்டரில் நடக்கும் சல்மா அருண், மனோஜ் கேரக்டரில் நடிக்கும் ஸ்ரீதேவ் ஆகியோர் சரவணன் ஸ்டோர் நகை கடைக்கு சென்ற வீடியோவை தமது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்கள். 

இதை பார்த்த ரசிகர்கள் ஸ்ருதிக்கு போட்டியாக ரோகினி தங்க நகைகளை அள்ளிப் போட்டுக் கொள்கிறாரே. இதை பார்த்த விஜயா இன்னும் தலையில் தூக்கி வைத்து ஆடுவார் என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement