• Jan 18 2025

ஹீரோயினாக அறிமுகமாகும் பிக்பாஸ் மாயா? பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ்! ஹீரோ யாரு தெரியுமா?

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் கலந்து கொண்டு, 2ண்ட் அப் ரன்னர் ஆக வந்தவர் தான் நடிகை மாயா. இவர் ஒரு மேடை நாடக நடிகர். அத்துடன் மேடை நாடகங்களில் நடிப்பதில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.

மேலும், மாயா ஒரு சில படங்களில் நடித்து இருந்தாலும் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபல படுத்திய படம் என்றால் அது கண்டிப்பாக கமல் நடித்த விக்ரம் திரைப்படம் தான். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாயா, அங்கு பல சர்ச்சைகளில் சிக்கியிருந்தாலும், அவற்றை பற்றி சிந்திக்காமல் தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

இந்த நிலையில், தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் மாயா கிருஷ்ணன்.


அதாவது தெலுங்கில் உருவாகி வரும் பைட் ராஜா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக மாயா நடித்துள்ளார். இப்படத்தில்  ஹீரோவாக ராம்ஸ் என்பவர் நடிக்கிறார். இதனை கிருஷ்ணா பிரசாத் என்பவர் இயக்குகிறார்.

அத்துடன், இப்படத்தில் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், மாயாவின் ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement