• Jul 27 2024

’இந்தியன் 2’ படத்தின் முடிவில் ஒரு ட்விஸ்ட்.. இதுவரை திரையுலகில் நடக்காத புதுமை.. கமல் வேற லெவல் திட்டம்..!

Sivalingam / 2 months ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள ’இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ஜூன் மாதம் ரிலீஸ் செய்ய முதலில் படக்குழுவினர் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் அனேகமாக ஜூலை 13ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ’இந்தியன் 2’ படம் மட்டுமின்றி ’இந்தியன் 3’ படமும் உருவாக்கப்பட்டிருப்பதாகவும் ’இந்தியன் 2’ படப்பிடிப்பின் போதே ’இந்தியன் 3’ படப்பிடிப்பையும் ஷங்கர் நடத்தி முடித்ததாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த ஆண்டு இறுதியில் ’இந்தியன் 3’ திரைப்படத்தை வெளியிட வாய்ப்பு இருப்பதாகவும் அதற்கான பணிகளும் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.



இந்த நிலையில் ’இந்தியன் 2’ படத்தின் டிரைலரை எடிட் செய்யும்போது ’இந்தியன் 3’ படத்தின் டிரைலரையும் எடிட் செய்ய எடிட்டருக்கு இயக்குநர் ஷங்கர் அறிவுறுத்தி உள்ளதாகவும் தற்போது இரண்டு படங்களின் ட்ரெய்லரும் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதுவரையில் திரையுலகில் நடக்காத புதுமையாக திரையரங்குகளில் ’இந்தியன் 2’ படத்தின் முடிவில் ’இந்தியன் 3’ படத்தின் டிரைலர் வெளியிட இருப்பதாகவும் கமல் மற்றும் ஷங்கர் வேற லெவலில் இந்த திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆக மொத்தத்தில் ’இந்தியன் 2’ படம் பார்க்க செல்லும் ரசிகர்களுக்கு ’இந்தியன் 3’ படத்தின் டிரைலர் என்ற ஆச்சரியம் காத்திருக்கிறது என்றும் இந்த இரண்டு படங்களும் உலக அளவில் மிகப்பெரிய வசூலை குவிக்கும் என்றும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement