தமிழ் சினிமாவில் காமெடியனாக ரசிகர்கள் மத்தியில் பலரை சிரிக்க வைத்த ரோபோ சங்கர் இன்று நம்முடன் இல்லை. இவருடைய மறைவு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை இருந்து வந்த ரோபோ சங்கர், ஆரம்பத்தில் மேடை கலைஞராக தனது உடம்பில் சில்வர் பெயிண்ட் அடித்து ரோபோ போல நடனம் ஆடி நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதனாலையே அவர் ரோபோ சங்கர் என அடையாளம் காணப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களின் கவனம் ஈர்த்தார். அதன் பின்பு மாரி, விசுவாசம், சிங்கம் ,வேலைனு வந்தா வெள்ளைக்காரன் போன்ற படங்களில் நடித்து மேலும் பிரபலமானார்.
இவருக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் டப்பிங் வேலைகள் மூலம் நல்ல வருமானம் கிடைத்துள்ளது.
இந்த நிலையில் சமீபத்தில் மறைந்த ரோபோ சங்கரின் சொத்து மதிப்பு சுமார் 5 தொடக்கம் 6 கோடி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் உள்ள வீடுகள், கார்கள் மற்றும் நிலங்கள் முதலிய சொத்துக்களும் காணப்படுவதாக கூறப்படுகின்றது.
ரோபோ சங்கரின் மறைவு அவரது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது. தினமும் அவருடைய மகள் இந்திரஜா அவரை பிரிந்து தனது வேதனையை பகிர்ந்து கொள்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவரைத் தேற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!