சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், விஜயா குடும்பத்தாருடன் ரத்ததானம் பண்ணுகின்றார். இதன் போது அவருக்கு டாக்டர் பட்டம் கொடுப்பதாக சொன்ன கோகிலா என்பவர் மீனாவைப் பார்த்து, இவருடைய தந்தை தான் ரயிலில் அடிபட்டு இறந்தாரா?
உங்களுடைய மாமியார் ரொம்ப நல்லம். உங்களை தன்னுடைய பிள்ளைக்கு திருமணம் பண்ணி வைத்து இருக்கின்றார் என்று பாராட்டுகின்றார். இதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றார்கள்.
அதன்பின்பு முத்து பார்வதியிடம் விசாரிக்க, விஜயா டாக்டர் பட்டம் வாங்குவதற்காக தான் இதையெல்லாம் செய்கின்றார் என்று அறிந்து கொள்கின்றார். எனவே பொய் சொல்லி இந்த பட்டத்தை வாங்க விடக்கூடாது என்று முடிவெடுக்கின்றார் முத்து.
அதன்படி அடுத்த நாள் மீனா விஷயத்தில் எதற்காக பொய் சொன்னீர்கள் என்று கேட்க, மீனாவையும் அவருடைய குடும்பத்தையும் வழமை போல திட்டுகின்றார். இதனை மீனா வீடியோவாக பதிவு செய்கின்றார்.
அதன் பின்பு மீனாவையும் அழைத்து தனக்கு பிடித்த சமையல் பண்ணுமாறு சொல்லுகின்றார். ஆனாலும் தனக்கு பூ ஆர்டர் இருக்கு என்று சொல்ல, அதையெல்லாம் விட்டுவிட்டு தான் சொல்வதை மட்டும் செய்யுமாறு திட்டி தீர்க்கின்றார்.
இன்னொரு பக்கம் மனோஜ் தனது நண்பரிடம் ராணி விஷயத்தை சொல்லி என்ன பண்ணலாம் என்று கேட்கின்றார். அதற்கு ராணி சொன்ன பொய்யை உண்மையாகி விடு. அப்போது அவரே உண்மையை ஒத்துக் கொள்வார் என்று சொல்லுகின்றார். மேலும் ராணி வீட்டில் யாரும் இல்லாத போது சொல்லுகின்றேன், நீ அங்கு வந்து நான் சொல்வது போல் பண்ணு என்று ஐடியா கொடுக்கின்றார்.
இறுதியில் முத்து பிச்சைக்காரன் போல் மாறுவேடத்தில் விஜயாவிடம் யாசகம் கேட்கின்றார். ஆனால் விஜயா அவரை தடியால் அடிக்கின்றார். இதனை மீனா வீடியோவாக எடுக்கின்றார். இதுதான் இன்றைய எபிசோட் .
Listen News!