• Nov 23 2025

'கருப்பு' பீக்கில்இருக்கும் எதிர்பார்ப்பு.. நட்டி நட்ராஜ் சொன்னது என்ன தெரியுமா?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

ஆர். ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் கருப்பு. இந்தப் படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ்  தயாரித்துள்ளது.  மேலும் இதில் சூர்யாவுக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.

இந்த படத்தில் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  இதற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

கருப்பு திரைப்படம் கிராமத்து பின்னணியில் நாட்டார் தெய்வ வழிபாடு உள்ள அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருவதாக கூறப்படுகின்றது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும், பின்னணி வேலைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.


அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கருப்பு திரைப்படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜனநாயகன், பராசக்தி ஆகிய படங்கள் அப்போது வெளியாவதால் பொங்கல் பண்டிகையில் கருப்பு ரிலீஸ் ஆக வாய்ப்பு இல்லை என கூறப்படுகின்றது.

இதனால் கருப்பு திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ரிலீஸை எதிர்பார்த்து,  சூர்யா மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  கருப்பு திரைப்படம் பற்றி நட்டி நட்ராஜ் கொடுத்த அப்டேட் வைரலாகி உள்ளது. அதாவது கருப்பு படத்தில் ஆர். ஜே பாலாஜி தன் பெஸ்ட் கொடுத்து வருகின்றார். 

மேலும் இந்த படம் சூர்யா சாரின் கேரியரில் பெஸ்ட் பிலிம் ஆகப்போகுது.  இந்த படம் தொடர்பில் ஃபேன்ஸ் கிட்ட ஏற்கனவே எதிர்பார்ப்பு பீக்கில் இருக்கிறது என தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement