• Sep 13 2025

'கிங்டம்' 2 நாள் பாக்ஸ் ஆஃபிஸ் கலக்கல் வசூல் ...! எவ்வளவு தெரியுமா?

Roshika / 1 month ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா நடிப்பில், கவுதம் தின்னனுரி இயக்கத்தில் உருவான கிங்டம் திரைப்படம், ஆக்சன் மற்றும் சஸ்பென்ஸ் கலந்த ஒரு முழுமையான என்டர்டெய்னராக வெளியாகியுள்ளது. இப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இசையமைப்பாளராக அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.


திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியானது. ஒரு அண்டர்கவர் ஸ்பையாக விஜய் தேவரகொண்டா மாறுபட்ட கேரக்டரில் திகழ்ந்துள்ளார். இவரது நடிப்பு, ஆக்சன் காட்சிகள் மற்றும் அனிருத் இசை அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.


கிங்டம் திரைப்படம் வெளியான முதல் நாளில் மட்டும் ரூ.39 கோடி வசூல் செய்து, ஒரு ப்ளாக்பஸ்டர் ஓப்பனிங்கை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பாஸ்டரின் படி, இரண்டாவது நாளில் உலகளவில் இப்படம் ரூ.53 கோடி வசூல் செய்துள்ளது.


இந்தப் படத்தின் வசூல் மேலும் பல நாட்களுக்குள் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடையே இப்படம் பெரிதும் பேசப்படும் திரைப்படமாக மாறியுள்ளது. இது விஜய் தேவரகொண்டாவின் வெற்றி நடை ஒன்றாக கருதப்படுகிறது.

Advertisement

Advertisement