• Sep 30 2025

கரூர் விவகாரத்தில் பிரபல யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்ட் கைது!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட கரூர்  கூட்டத்தில்  சிக்கி 41 பேர் பலியானார்கள். இந்தச் சம்பவம் நாட்டையே பெரும் பரபரப்புக்கு உள்ளாக்கியது. 

இந்த சம்பவம் தொடர்பாக  இதன் முக்கிய புள்ளிகள்  மீது வழக்குப்பதியப்பட்டுள்ளதோடு அடுத்தடுத்து பலர் கைது செய்யப்பட்ட வருகின்றனர். இதுவரையில் 3 பேர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. 

இந்த நிலையில்,  கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய குற்றச்சாட்டில் பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் உட்பட பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.


ஒரு பக்கம் விஜயை விமர்சித்தும், இன்னொரு பக்கம் காவல்துறையை குறை சொல்லியும், இந்த விபத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம் எனவும் பதிவிடப்பட்டு வருகின்றது.  இதனால் அவதூறு பரப்புபவர்கள் மீது வழக்கு பதியப்பட்டு  கைது செய்யப்பட்டு வருகின்றனர். 

இவ்வாறான நிலையிலே ஃபெலிக்ஸ் ஜெரால்ட்  கைது செய்யப்பட்டுள்ளார்.  மேலும்  வதந்தி பரப்பிய 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement