பிக்பாஸ் சீசன் 8 இறுதி வாரத்தை நெருங்கியுள்ளது.இன்றுடன் 100 நாட்கள் கடந்துள்ள நிலையில் முத்து ,சவுண்டு,ரயான்,ஜாக்குலின்,விஷால் ஆகிய போட்டியாளர்கள் தற்போது final வாரத்தில் விளையாடி வருகின்றனர்.பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக பணப்பெட்டி எடுப்பவர்கள் தொடர்ந்து விளையாடலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய முதல் 50,00 000 ரூபாய் வைக்கப்பட்டிருந்தது 15 செக்கனுக்குள் யார் சென்று பெட்டியை எடுத்து வெளியேறுகிறார்களோ அவர்களுக்கு குறித்த தொகை வழங்கப்படும் எனவும் அவ்வாறு குறித்த செக்கனுக்குள் வெளியேற முடியாவிடின் போட்டியில் இருந்து வெளியேறுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முதலில் இவ் டாஸ்க்கினை விளையாடுவதற்கு முத்து ஒத்துக்கொண்டிருந்தமையினால் அவர் பெட்டியினை எடுப்பதற்கு சென்றார்.இன்றைய ப்ரோமோவில் முத்து உள்ளே செல்வது போன்று காட்டி மிகவும் சுவாரஸ்யத்தினை ஏற்படுத்தி இருந்தது விஜய் டிவி
இந்நிலையில் தற்போது ஒரு சில சமூக வலைத்தளங்களில் முத்து 12 செக்கனுக்குள் பெட்டியை எடுத்து திரும்பியுள்ள வீடியோக்கள் கசிந்துள்ளது.இதை பார்த்த ரசிகர்கள் "முத்து ஆன் பயர் " போன்று தமது கருத்துக்களை கூறி வருகின்றனர்.
Listen News!