• Jan 19 2025

இயக்குநர் திருமுருகன் அடுத்த சீரியல்.. டைரக்டா யூடியூபில் வெளியாகிறதா?

Sivalingam / 9 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் திருமுருகன் இயக்கும் சீரியல் என்றாலே தாய்க்குலங்கள் அந்த சீரியலை விடாமல் பார்ப்பார்கள் என்பதும், எத்தனை வருடங்கள் ஆனாலும் அந்த சீரியல் மிகப்பெரிய அளவில் பிரபலமாகும் என்பது தெரிந்தது. இந்த நிலையில் ’கல்யாண வீடு’ சீரியல் முடிவடைந்து சில ஆண்டுகள் ஆகிய நிலையில் திருமுருகன் இயக்கும் அடுத்த சீரியல் குறித்த எந்த தகவலும் வராமல் இருந்த நிலையில் தற்போது அவருடைய புதிய சீரியல் நேரடியாக அவருடைய யூடியூபில் சேனலில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

‘எம்டன் மகன்’ ’முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு’ ஆகிய இரண்டு படங்களை இயக்கிய இயக்குநர் திருமுருகன் சில குறும்படங்களையும் இயக்கியுள்ளார். அதன் பிறகு தான் அவருக்கு டிவி சீரியல் செட் ஆகியது. கடந்த 1998 ஆம் ஆண்டு பொதிகை டிவியில் ’கோகுலம் காலனி’ என்ற சீரியலை இயக்கியவர் அதன் பின்னர் சன் டிவி, ராஜ் டிவி உள்பட பல டிவியில் சீரியல்களை இயக்கினார்.



குறிப்பாக சன் டிவியில் அவர் இயக்கத்தில் உருவான ’மெட்டி ஒலி’ சீரியல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. அதனை அடுத்து ’நாதஸ்வரம்’ ’தேன்நிலவு’ ’குலதெய்வம்’ ’கல்யாண வீடு’ ஆகிய சீரியல்களும் சன் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகியது என்பதும் ஒவ்வொரு சீரியலும் குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஒளிபரப்பானாலும் பார்வையாளர்களுக்கு அலுப்பு தட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ’கல்யாணம் வீடு’ சீரியல் கலந்த 2020 ஆம் ஆண்டு முடிந்த நிலையில் அவருடைய அடுத்த சீரியல் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த சீரியல் அவருடைய யூடியூப் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பம் சார்ந்த கதைகளை எதார்த்தமான, எளிமையான கேரக்டர்களை வைத்துக்கொண்டு செல்வதுதான் திருமுருகன் பாணி என்ற நிலையில் அவரது புதிய சீரியலுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.  

Advertisement

Advertisement