• Jan 19 2025

சுத்தமா திருந்த முடிவெடுத்த ரோகிணி.. மீனா கொடுத்த பளீச் அட்வைஸ்! டைரக்டர் சீரியல் ஸ்கிரிப்ட மாத்திட்டாரா?

Aathira / 9 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் அடிமையாகவே காணப்படுகிறார்கள்.

இந்த சீரியலில் தற்போது மனோஜ் கோடீஸ்வரன் ஆவதற்காக சாமியார் சொன்ன பரிகாரத்தின் படி, கோவிலில் இருந்து சாப்பிடாமல் பிச்சை எடுக்கிறார்.

இதை தொடர்ந்து அதே கோவிலுக்கு மீனா செல்கிறார். அங்கு மனோஜ் பிச்சை எடுப்பதை பார்த்துவிட்டு முத்துவுக்கு போன் போட்டு சொல்கிறார். அங்குவந்த முத்து, மனோஜை கூட்டிக் கொண்டு வீட்டுக்கு போக, பிச்சைகாரனை வீட்டுக்கு கூட்டி வந்து இருக்கான் என பேசிய விஜயா, அது மனோஜ் தான் என தெரிந்ததும் அதிர்ச்சி அடைகிறார்.

இவ்வாறு இனிவரும் எபிசோட் பற்றி கதை ப்ரோமோவில் வெளியாகி ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


மறுப்பக்கம், ரோகிணி அப்பா விஷயத்தில் சிக்கி உள்ளார். அதுபோல் பிஏ வும் தான் கல்யாணம் செய்ய ஒரு லட்சம் பணம் தர வேண்டும் என மிரட்டி விட்டு போயுள்ளார். 

தற்போது மனோஜ் பிச்சை எடுத்த விஷயத்தில், மீண்டும் விஜயா ரோகிணியை தான் கிடுக்குப்புடி பிடிக்கவுள்ளார் என தோன்றுகிறது. மனோஜ் ஆசைப்பட்ட படி கனடா வேளைக்கு செல்ல உங்க அப்பா, மாமாட காசு வாங்கி கொடு என விடாப்பிடியாக நிற்கவுள்ளார்.


இந்த சீரியலில் ரோகிணியின் கதாபாத்திரமும் சிறகடிக்க ஆசை சீரியலை விறுவிறுப்பாக கொண்டு செல்ல உதவுகிறது. முத்துவுக்கும் ரோகிணிக்கும் இடையில் உள்ள பிரச்சனையும் சுவராஸ்யமாக உள்ளது.

இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியல் மீனாவும், ரோகிணியும் ரீல்ஸ் செய்து வெளியிட்டு உள்ளார்கள். அது தற்போது வைரலாகி உள்ளது.

அதில், மீனாவிடம் ரோகிணி நான் திருந்தினா எப்படி இருக்கும் என  கேட்க, எதுக்குப்பா நமக்கு வேண்டாத வேலை என மீனா அட்வைஸ் கொடுக்க, இல்ல நான் திருந்துரதா முடிவு பண்ணிட்டேன் என ரோகிணி சொல்லுகிறார். இதோ அந்த வீடியோ,


Advertisement

Advertisement