• Sep 03 2026

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ‘மாகாளி’.!

Aathira / 1 hour ago

Advertisement

Listen News!

இயக்குநர் அமீர் கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘மாகாளி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரும் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் அவரது மனைவி திவ்யா மாரி செல்வராஜ் இணைந்து, தங்களது சொந்த தயாரிப்பு நிறுவனமான நவ்வி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிக்கின்றனர்.

‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’, ‘மாமன்னன்’ ஆகிய திரைப்படங்களில் மாரி செல்வராஜிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.பி. அரவிந்த், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படத்தை எழுதி இயக்குவதும் அவரே.

இத்திரைப்படத்தில் ஸ்வாசிகா மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

‘மாகாளி’ திரைப்படம் குறித்த மேலும் பல முக்கிய அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement