• Sep 03 2026

நயன்தாராவுடன் இணைந்த கவினுக்கு அடித்த ஜாக்பாட்… 6 நாளில் "ஹாய்" பட வசூல் இவ்வளவா?

shali / 56 minutes ago

Advertisement

Listen News!

நடிகர் கவின் மற்றும் நயன்தாரா இணைந்து நடித்துள்ள ‘ஹாய்’ திரைப்படம் கடந்த மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ‘லியோ’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய விஷ்ணு எடவன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஓரளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக, படத்தின் கதைக்களம் மற்றும் நடிகர்களின் நடிப்பு குறித்து பாசிட்டிவான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த கவின், தற்போது கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ‘டாடா’ திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில், அதன்பிறகு வெளியான சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால் மீண்டும் ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் அவர் ‘ஹாய்’ படத்தில் நடித்திருந்தார்.


இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் பிரபு, பாக்யராஜ், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில் ‘ஹாய்’ படத்தின் ஆறாவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஆறாவது நாளில் மட்டும் ரூ.78 லட்சம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு முந்தைய நாள் ரூ.87 லட்சம் வசூல் செய்திருந்த நிலையில், ஆறு நாட்களில் இப்படம் மொத்தமாக ரூ.8.21 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீடியம் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் குறுகிய காலத்தில் இந்த அளவுக்கு வசூல் செய்திருப்பது கவினின் மார்க்கெட்டுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது. அதேபோல், நயன்தாராவின் சமீபத்திய படமான ‘டாக்சிக்’ எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ‘ஹாய்’ படத்தின் வரவேற்பு அவருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement