• Jan 19 2025

நான் அப்படி என்று சிக்னல் கிடைத்ததா??? சீனியர் காமெடி நடிகரை ரகசியமாக கேரவனுக்கு அழைத்த பிரகதி?

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

நடிகை பிரகதி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'அரண்மனை கிளி சீரியலில் மாமியாராக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்துள்ள பிரகதி, ஒரு சில திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்.

பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை பிரகதி, தமிழில் சில படங்களில் அக்கா, அண்ணி, அம்மா கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அம்மா கேரக்டரில் நடித்தாலும், வயசு ஆனாலும் அழகு இன்னும் உன்னைவிட்டு போகல என்ற வசனம் இவருக்கு கச்சிதமாக பொருந்தும் என்று தான் கூற வேண்டும். இந்த வயதுலையும் அம்சமா இருக்கிறார்.

இப்  பட வாய்ப்பு இல்லை என்றாலும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தால், ரசிகர்கள் மறக்க மாட்டார்கள் என்பதை நன்கு தெரிந்து கொண்ட பிரகதி போட்டோக்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.


தன்னுடைய இருபதாவது வயதில் ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரகதி. இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். எனினும் இதையடுத்து, தனி ஒருத்தியாக போராடி இன்று இரு மகன்களையும் நன்றாக படிக்க வைத்துள்ளார்.

இந்த நிலையில், பிரபல சீனியர் காமெடி நடிகர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாக அதிர்ச்சி தகவல் ஒன்றை கூறியுள்ளார் நடிகை பிரகதி.

அதன்படி அவர் அளித்த பேட்டியொன்றில், அப்போது ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சம்பவம் தான் இது. சீனியர் காமெடி நடிகர் ஒருவர் என்னிடம் தவறான ரீதியில் நடந்து கொண்டார். 


அது மட்டுமின்றி மறைமுகமாக என்னை படுகைக்கும் அழைத்தார். எனினும் அவ்வாறு அழைத்த அவரை, பல பேர் முன்னிலையில் நான் அசிங்கப்படுத்த விரும்பவில்லை. அன்றே ஷூட்டிங் முடியும் வரை பொறுமையாக இருந்தேன். அதன் பிறகு அவரை எனது கேரவனுக்கு அழைத்துப் பேசினேன். 

அதன் போது நீங்கள் என்னிடம் தவறாக நடந்து கொள்ளலாம் என்று நான் எதுவும் உங்களுக்கு சிக்னல் கொடுத்தேனா? என்ற கேட்க, அதற்கு அவர்  இல்லை என்றார்.

அப்படி என்றால் எனது உடல் மொழி எதுவும் உங்களுக்கு தவறாக தோன்ற வைத்ததா? என்று கேட்க, அதற்கும் இல்லை என்றார். உடனே நான் நீங்கள் நடந்து கொண்ட விதம் ரொம்பவே தவறானது. நீங்கள் கீழ்த்தரமான செயல் செய்துள்ளீர்கள். நான் நினைத்திருந்தால் உங்களை அந்த இடத்திலேயே அசிங்கப்படுத்தி அனுப்பி இருக்கலாம். 


ஆனால் உங்களது இமேஜ் உடைந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் பொறுமையாக இருந்தேன். இப்போது அதனால் தான்  தனியாக அழைத்தும் பேசுகிறேன் என்று எச்சரித்து அனுப்பினேன்.

இவ்வாறு நடிகை பிரகதி பேசிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது. எனினும் பிரகதி சொன்ன அந்த சீனியர் காமெடி நடிகர் யார் என சமூக வலைத்தளத்தில் வலைவீசி வருகிறார்கள்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement